செய்திகள்

மூன்று சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் ரூபா தண்டப்பணம்

கிளிநொச்சிப்பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச் சென்ற மூன்று சாரதிகளுக்கு தலா ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சிப் பகுதியில் அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறி டிப்பர் வாகனத்தில் மணல் ஏற்றிச்சென்ற மூன்று டிப்பர் வாகனங்களையும் அதன் சாரதிகளையும் கைது செய்து அவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்த கிளிநொச்சிப் பொலிசார்  கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.ஜே.பிரபாகரன் முன்னிலையில் ஆயர்படுத்தியதையடுத்து தலா ஐயாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதுடன் மணல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
n10