செய்திகள்

மூன்று தலைமுறைகளில் இளையராஜா

தற்போதுள்ள இளம் நடிகர்களில் விக்ரம் பிரபு முக்கியமானவர். சிவாஜியின் பேரன், பிரபுவின் மகன் போன்ற பெருமைகள் இருந்தாலும். கதை தேர்வுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து நடிப்பவர்.   கும்கி, இவன் வேற மாதிரி, சிகரம் தொடு, அரிமா நம்பி, போன்ற படங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

தற்போது இவர் ஏ.எல்.விஜய் இயக்கும் இது என்ன மாயம் பாடத்திலும், குமரவேலன் இயக்கும் வாகா படத்திலும் நடித்து வருகிறார்.  இதைத்தொடர்ந்து  ‘மஞ்சப்பை’ படத்தை இயக்கிய ராகவன் இயக்கத்தில்  நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .

இப்படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பார் என்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். படத்தில் நடிக்கவிருக்கும் நாயகி, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது.

சிவாஜி கணேஷன்,  பிரபுவைத் தொடர்ந்து மூன்றாம் தலைமுறையான விக்ரம் பிரவின் படத்திற்கு இசை   அமைக்கிறார் ராஜா.