செய்திகள்

மூன்று பேரின் உயிர் மூலக் கூறில் இருந்து குழந்தை உருவாக்கம்: பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்று தீர்மானம்.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் இன்றைய தினம் நடை பெற உள்ள வாக்கெடுப்பில் தாயில் இருந்து குழந்தைக்கு பரம்பரை மூலம் கடத்தப்படக்கூடிய பயங்கர நோய்களை (mitochondrial disease) தடுக்கும் விதத்தில் மூன்று பேரின் உயிர் மூலக் கூறில் இருந்து குழந்தை உருவாக்கம் என்ற மிட்டோக்கோன்ட்ரியா மாற்று தொழில்  நுட்ப முறை தீர்மானிக்கப்படவுள்ளது. பிரித்தானிய பாராளுமன்றத்தில் இது இன்று நிறைவேற்றப் பட்டால் பிரித்தானியா உலகில் முதன் முதலில்  மிட்டோக்கோன்ட்ரியா மாற்று தொழில் நுட்பத்தை சட்டபூர்வமாக்கிய நாடாக திகழும் அதேவேளை, இதன் மூலம் அடுத்த ஒரு வருட காலத்திற்குள் முதலாவது குழந்தை  உருவாக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதுடன் ஒவ்வோரு வருடத்திலும் குறைந்தது 150 பேர் இதன் மூலம் நன்மையடைவார்கள். அதேவேளை இந்த தொழில் நுட்பத்தை  மூத்த திருச்சபைத் தலைவர்கள் மற்றும் இயற்கை நெறிமுறைக்கு சார்பானவர்கள் நிறைவேற்றாமல் தடுப்பதற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

article-0-09231865000005DC-362_468x311