மூன்று மாணவர்கள் விபத்தில் படுகாயம்
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேற்றாத்தீவில் இன்று காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த டிப்பர் ரக வாகனமொன்று விபத்துக்குள்ளானததால்ää அதில் பயணித்த மாணவர்கள் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தேற்றாத்தீவு கண்ணகியம்மன் கோவிலில் சிரமதானத்துக்காக தேற்றாத்தீவிலுள்ள பாடசாலையொன்றிலிருந்து மாணவர்களை ஏற்றிச்சென்றுகொண்டிருந்த இந்த டிப்பர் ரக வாகனத்தின் பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த சில்லொன்று கழன்றுள்ளது. இந்த நிலையில்ää இந்த வாகனம் சரிந்து விபத்துக்குள்ளானது. இதன்போதுää காயமடைந்த மாணவர்கள் மூவரும் களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் இந்த விபத்து தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.