செய்திகள்

மூன்று மாதங்களில் 146 இலங்கையர்கள் சுவிசில் அடைக்கலம் கோரி விண்ணப்பம்

இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மாத்திரம், சுவிற்சர்லாந்தில் அடைக்கலம் கோரி, 146 இலங்கையர்கள் விண்ணப்பித்திருப்பதாக  அந்த நாட்டின் குடியேற்றச் செயலகம் தெரிவித்துள்ளது.

அதேவேளை. கடந்த ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில், சுவிசில் அடைக்கலம் கோரியுள்ளவர்களின் எண்ணிக்கை, 45 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 8315 பேர் சுவிசில் அடைக்கலம் கோரி விண்ணப்பித்துள்ளனர்.