செய்திகள்

மூன்று மாத விடுமுறை கேட்ட பசில்

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ச மூன்று மாத விமுறை கேட்டு பாராளுமன்றில் தீர்மானம் ஒன்றை கட்சியினூடாக வழங்கியிருந்தார்.

இத்தீர்மானத்தை எதிர்கட்சியின் தலைவர் நிமல் சிறிபாலவினால் சமர்ப்பிக்கப்பட்டது.

வெளிநாடு ஒன்றில் தற்போது வசிக்கும் பசில் கடந்த இரண்டு மாதங்களாக பாராளுமன்றுக்கு சமூகமளிக்கவில்லை.
இந்நிலையில் மேலும் மூன்று மாத விடுமுறையை பாராளுமன்றிடம் கேட்டு கொண்டார்.

இதன்போது ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸ்ஸாநாயக, தகுந்த காரணத்தை தெரிவிக்காமல் விடுமுறையை நீடிக்க முடியாது என சபாநாயகரிடம் கூறினார்.

அனுரவின் கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது ஏற்றுக்கொண்ட சபாநாயகர் விடுமுறைக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்க வேண்டுமென நிமல் சிறிபாலவுக்கு கூறினார்