செய்திகள்

‘மூன்று பெற்றோர் குழந்தைகளை’ உருவாக்கும் சட்டமூலத்துக்கு பிரித்தானிய பாராளுமன்றம் அங்கீகாரம்

ஒரு வரலாற்று முக்கியத்துவம் மிக்க நிகழ்வாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இரு பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோரின் மரபணுக்களில் இருந்து குழந்தைகளை உருவாக்கும் சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன்மூலம் மிட்டோக்கோன்ட்ரியா (இழைமணி) மாற்று தொழில் நுட்ப முறையில் தாயில் இருந்து குழந்தைக்கு மரபணு நோய்கள் கடத்தப்படுவதை தடுத்து நிறுத்தக்கூடியதாக இருக்கும்.

இதன் மூலம் பிரித்தானியா மூவரில் இருந்து குழந்தைகளை உருவாக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் நாடு என்ற பெருமையைப் பெருகிறது. பிரித்தானிய மக்கள பிரதிநிதிகள் சபையில் இன்று இடம் பெற்ற வாக்கெடுப்பில், 382 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாகவும் 128 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர்.

விவாதத்தின் போது, அமைச்சர்கள் மிட்டோக்கோன்ட்ரியா மாற்று தொழில் நுட்பம் குடும்பங்களுக்கு, “ஒரு இருண்ட சுரங்கப்பாதை முடிவில் ஒளி” என்று வர்ணித்தனர்.

இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி பேராசிரியர் டேம் சாலி டேவிஸ், இச்சட்ட மூலம் , அறிவியல் முன்னேற்றத்தின் முன்னோடியாக இங்கிலாந்து விளங்குவதாகக் கூறினார்.

ஆதரவாளர்கள் இச்சட்டமானது “முற்போக்கான மருத்துவத்துக்கான ஒரு நல்ல செய்தி” என்று கூறினார்கள். அதேவேளை, விமர்சகர்கள் இத் தொழில் நுட்பம் பல நெறிமுறை மற்றும் பாதுகாப்பு கவலைகளை எழுப்புகிறது என்றும் இதற்கு எதிரான போராட்டம் தொடரும் என்று கூறினார்கள்.

_62907355_pnt_slide1_624x398_2

_62905219_pnt_slide2_624x398