செய்திகள்

மெட்ரோ ரயிலில் முதல் நாளன்று 40,000 பேர் பயணித்தனர்

சென்னை மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் நாளன்று சுமார் 40 ஆயிரம் பேர் பயணித்துள்ளனர். மொத்தம் ரூ.16 லட்சத்துக்கு பயணச் சீட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆலந்தூர் – கோயம்பேடு இடையிலான சென்னையின் முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவையை முதல்வர் ஜெயலலிதா திங்கள்கிழமை ஆரம்பித்து வைத்தார். அன்றையதினமே சென்னை மக்கள் குதூகலத்துடன் இந்த ரயிலில் பயணித்தனர். இரண்டாவது நாளான நேற்றும் பெருமாவான மக்கள் மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆர்வம் காட்டினர். சிலர் கட்டணம் அதிகமிருப்பதாகக் கூறி திரும்பிச் சென்றனர்.

இதேவளை, ஸ்டாலின் மற்றும் விஜயகாந்த் உட்பட பல அரசியல் வாதிகளும் இந்த ரயிலில் பயணம் செய்து மக்களுடன் அளவலாவியுள்ளனர்.

Stalin