செய்திகள்

மெதமுலனவில் தோல்வியடைந்த குழு அரசாங்கத்தை சீர்குலைக்க முயற்சி : கயந்த கருணாதிலக்க

மெதமுலனவில் தோல்வியடைந்த குழு அரசாங்கத்தின் செயற்திட்டங்களை சீர்குலைக்க முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

அமைச்சர் கயந்த கருணாதிலக்க இது தொடர்பில் சிறிகொத்த கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெளிவூட்டினர். ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்ததாவது;

“ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தூய்மையான ஒற்றுமையை தாங்கிக்கொள்ள முடியாமல் மெதமுலனவில் தோல்வியடைந்த குழு அரசாங்கத்தின் செயற்திட்டங்களை சீர்குலைக்க முயற்சிப்பதை காணக்கூடியதாகவுள்ளது.

அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைக்குமாறு கூறுகின்றனர். அரசாங்கத்தை அவர்களிடம் ஒப்படைப்பதற்காக மக்கள் ஆணையை வழங்கவில்லை. அவர்களை வீட்டிற்கு அனுப்பி புதிய ஆட்சியொன்றை இந்த நாட்டிற்குள் உருவாக்குவதற்கே மக்கள் ஆணையை வழங்கினார்கள்.

பொதுத்தேர்தலின் போது யார் மீது நம்பிக்கை கொண்டுள்ளார்கள் எனவும், நம்பிக்கையில்லாதவர்கள் யார் எனவும் மக்கள் தெளிவாக தீர்மானிப்பார்கள்.”