செய்திகள்

மேற்கு வங்க சட்டபேரவை தேர்தலில் 2ம் கட்ட வாக்குபதிவு தொடங்கியது

மேற்கு வங்க மாநில சட்டபேரவை தேர்தலுக்கான 2ம் கட்ட வாக்குபதிவு இன்று தொடங்கியது. மொத்தம் 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு முதல் கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 4, 11 ஆகிய தேதிகளில் இரண்டு பிரிவாக நடைபெற்றது.

இதையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தல் இன்று நடைபெறவுள்ளது. இதில், டார்ஜிலிங், அலிப்பூர்துவார், ஜல்பைகுரி உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 54 தொகுதிகள் இடம்பெறுகின்றன.

தேர்தலில் 33 பெண்கள் உள்பட 383 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். 1 கோடியே 20 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். சைந்தியா, ஹன்சன், சூரி உள்ளிட்ட 7 தொகுதிகள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகள் என்பதால் அங்கு பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மொத்தம் 13,600 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதில், 2,909 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என தேர்தல் ஆணையம் கணித்துள்ளது. அங்கு, தேர்தலை நியாயமாக நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

N5