செய்திகள்

மேலும் பிரபல அரசியல்வாதிகள் சிலர் எதிர்வரும் நாட்களில் கைதாகலாம்?

கடந்த ஆட்சிக் காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணைகளினூடாக வெளியாகியுள்ள தகவல்களின் பிரகாரம் எதிர்வரும் நாட்களில் மேலும் பிரபல அரசியல்வாதிகள் 5 பேர் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இவ்வாறு கைது செய்யப்படவுள்ளவர்களில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் தெரிய வருகின்றது.

திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.