செய்திகள்

மேலும் 10 சுதந்திக் கட்சி எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவி?

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மேலும் 10 பேருக்கு விரைவில் அமைச்சர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரச தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சியின் இரண்டாம் நிலையில் உள்ள தலைவர்களுக்கே இந்த அமைச்சர் பதவிகள் வழங்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதையடுத்து அக்கட்சியைச் சேர்ந்த 26 எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் விரைவில் மேலும் 10 எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக கடந்த வாரம் இரத்தினபுரியில் நடத்தப்பட்ட பேரணியில் கட்சித் தலைமையின் தடையையும் மீறி 27 ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொண்டிருந்தார்கள். மேலும் பலர் மகிந்த ஆதரவு அணியில் இணையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியிலேயே மேலும் சிலருக்கு அமைச்சர் பதவிகளைக் கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிடுவதாகச் சொல்லப்படுகின்றது.