செய்திகள்

மேலும் 10 பேர் அரசாங்கத்திலிருந்து விலக திட்டம்

அடுத்து வரும் இரண்டு வாரங்களில் மேலும் 10 ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தங்களின் அமைச்சுப் பதவிகளை துறந்து அரசாங்கத்திலிருந்து விலகவுள்ளனர். இவர்களில் 5 பேர் அடுத்த வாரமும் மற்றைய 5பேர் அதற்கு அடுத்த வாரமும் இரண்டு பிரிவுகளாக பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பதவி விலகுபவர்களில்  அமைச்சர்கள் ,பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜங்க அமைச்சர்கள் அடங்குகின்றனர்.
பல்வேறு தரப்பினரிடமிருந்து விடுக்கப்படும் கோரிக்கைகளையடுத்தே இவர்கள் பதவி விலக தீர்மானித்துள்ளனர். கடந்த மார்ச் 22ம் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 26பேர் அமைச்சுப்பதவிகளை பெற்று அராங்கத்தில் இணைந்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களில் 4பேர் நேற்று முன்தினம் அரசாங்கத்திலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.