செய்திகள்

மேல்மாடியில் இருந்து தவறி விழுந்த பிள்ளை வைத்தியசாலையில் அனுமதி

மன்னார் பிரதேச செயலகத்தில் இன்று இடம் பெற்ற வைபவமொன்றில் கலந்து கொள்ள வருகைத்தந்த அதிகாரியொருவரின் பிள்ளையொன்று மேல்மாடியொன்றிலிருந்து தவறி விழுந்ததையடுத்து அந்த பிள்ளை உடனடியாக மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு காயங்குள்ளானவர் 5 வயது நிரம்பிய தரணிஸ் எனவும் இவர் நருவலிக்குளத்தை சேர்ந்தவர்.

வடமாகாண சபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன் மற்றும் அமைச்சர் றிசாத் பதியுதீனின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் எம்.முனவ்வர் ஆகியோர் உடன் மன்னார் வைத்தியசாலைக்கு சென்று பிள்ளையினை பார்வையிட்டிருப்படதுடன்.மேலதிக சிகிச்சை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாணம் பிரதான வைத்தியசாலைக்கு உடன் இடமாற்றம் செய்வது தொடர்பில் வைத்திய அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.

IMG-20150124-WA0008 (1)