செய்திகள்

மேல் ,தென் கடல் பகுதியில் “ஜெலிபிஸ்” பெருக்கம் கடலில் குளிப்போர் அவதானமாக இருக்கவும்

மேல் மற்றும் தென்  கடல் பகுதிகளில் “ஜெலி பிஸ்” எனப்படும் ஒருவகை மீன் இனத்தின் பெருக்கம் அதிகரித்து காணப்படுவதால் அந்த பகுதி கடல்களில் குளிக்கும் போது அவதானமாக இருக்குமாறு சூழல்வியலாளர்கள் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.
இந்த மீன் வகை நச்சுத்தன்மை கொண்டது என்பதால் அவை உடலில் பட்டால் உயிர் ஆபத்து ஏற்படலாமெனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் கல்கிசை கடல் பகுதியில் அந்த மீன் இனத்தின் தாக்குதல் காரணமாக 50 பேர் வரையானோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.