செய்திகள்

மேல் மாகாண சபையில் ஆளும் கட்சிக்குள் பிளவு : பிரசன்னவை முதலமைச்சர் பதவியிலிருந்து நீக்க திட்டம்

மேல் மாகாண சபையில் ஆளுங்கட்சி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த சபையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே ஆட்சியமைக்கின்ற நிலையில் முதலமச்சராக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த பிரசன்ன ரணதுங்க பதவி வகிக்கின்றார்.
இந்நிலையில் பிரசன்ன ரணதுங்க தலைமையிலான குழுவொன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஆதரவாக செயற்படுகின்ற அதேவேளை ஹிருனிக்கா பிரேமசந்திர தலைமையிலான குழுவொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவாக செயற்படுகின்றனர்.
இதன் காரணமாக அங்கு ஆளுங்கட்சியினரிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி மைத்திரி ஆதரவு அணியினர் பிரசன்ன ரணதுங்கவை முதமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சியில் ஈடு பட்டுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும் தன் பக்கமே அதிகளவான உறுப்பினர்கள் இருப்பதாக பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.