செய்திகள்

மேல் மாகாண பாடசாலைகளை திறக்கும் தினம் தொடர்பான அறிவித்தல்

மேல் மாகாணத்தில் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பான அறிவித்தலை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

இதன்படி தரம் 05, 11 மற்றும் 13ஆம் வகுப்புகள் மார்ச் 15ஆம் திகதியும் தரம் 1 முதல் 4 மற்றும் 6 முதல் 10, 12 ஆகிய வகுப்புக்களை ஏப்ரல் மாதம் 19ஆம் திகதியும் ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று நிலைமையால் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் மாகாணத்தின் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)