செய்திகள்

மே இறுதியில் பொதுத் தேர்தல்?

பாராளுமன்ற தேர்தலை மே மாத இறுதியில் நடத்த நடவடிக்கையெடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஏப்ரல் 25ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்த போதும் நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமைகளை கருத்திற்கொண்டு தேர்தலை ஒத்தி வைப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருந்தது.
எவ்வாறாயினும் அரசியலமைப்பின் பிரகாரம் ஜுன் 3ஆம் திகதிக்குள் புதிய பாராளுமன்றத்தை கூட்ட வேண்டுமென்ற நிலைமையில் தேர்தலை மே மாதத்திற்குள் நடத்துவதற்கு முடியாது போனால் பாராளுமன்றத்தை குறித்த தினத்திற்குள் கூட்ட முடியாது போகும் என்பதால் அது தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் கருத்தை கேட்டுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு ஜனாதிபதியை கேட்டுக்கொண்டிருந்தது.
ஆனபோதும் தேர்தல் தொடர்பாக தீர்மானம் எடுக்கும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவினது என்பதனால் அந்த விடயத்தில் ஜனாதிபதி தலையிட மாட்டார் என ஜனாதிபதி செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழு தேர்தல் தினம் தொடர்பாக தீர்மானம் எடுக்கவுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமை இந்த மாதத்திற்குள் குறையுமாக இருந்தால் மே இறுதியில் தேர்தல் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது. -(3)