செய்திகள்

மே தின ஊர்வலம் : இ.போ.சவுக்கு 1 கோடியே 56 இலட்சம் வருமானம்

உலக தொழிலாளர் தினத்தன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒரு கோடியே ஐம்பத்தாறு இலட்சம் ரூபாவுக்கும் மேல் வருமானம் கிடைத்ததாக உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

இத்தொகையானது, இலங்கை போக்குவரத்து சபை ஒரு நாளில் பெற்றுக் கொண்ட அதிக வருமானம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.பணத்தைப் பெற்றுக் கொண்டு பஸ் வண்டிகளை வழங்கியதால் இந்தளவு வருமானம் உழைக்க முடிந்ததாக தெரிவித்த அமைச்சர், சகல கட்சிகளும் இம்முறை பஸ்களை வாடகைக்கு பெற்றுக் கொண்டதால் இந்தளவு வருமானத்தை பெறக்கூடியதாக இருந்தது எனவும் சுட்டிக்காட்டினார்.

இந்த பஸ்களை வழங்குவதில் தாம் முன்னின்று செயற்பட்டதாக தெரிவித்த அமைச்சர், மக்களின் தேவையை நிறைவேற்றுவதன் மூலம் இலங்கை போக்குவரத்து சபையை தரமான சேவை வழங்கும் நிறுவனமாக மாற்றியமைக்க முடியுமென்றும் அவர் தெரிவித்தார்.