செய்திகள்

மே மாதத்தில் புதிய கட்சி ஆரம்பிக்கப்படும் : சோமவன்ச

தனது புதிய கட்சி எதிர்வரும் மே மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென ஜே.வி.பியிலிருந்து விலகிய அந்த கட்சியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் முதல் வாரத்தில் மாநாடொன்றை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் அதனை தொடர்ந்து புதிய கட்சியை ஆரம்பிக்கவுள்ளதாகவும் கட்சிக்கு என்ன பெயர் வைப்பதென தற்போது ஆராய்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஜே.வி.பியிலிருந்து மேலும் சிலர் அவர் அமைக்கவுள்ள புதிய கட்சியில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாவதுடன் அவர்களில் கட்சியில் முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் சிலரும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.