செய்திகள்

மே முதல்வாரத்தில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பலாம்

மே மாத முதல் வாரத்தில் மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்ப முடியுமாக இருக்குமென அமைச்சரவை இணை பேச்சாளரும் அமைச்சருமான அமைச்சர் ரமேஷ் பதிரண தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையை புரிந்துகொண்டு சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றி புத்தாண்டை கொண்டாட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதார துறையினர் குறிப்பிடும் ஆலோசனைகள் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இந்நிலைமை அடுத்த மாதம் முதல் வாரம் வரைக்கும் நீடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மே மாத இறுதியில் பொது தேர்தல் இடம்பெற்று பலமானதொரு அரசாங்கம் அமைக்கப்படும் என்றும் அவ்வாறு அமைக்கப்படும் அரசாங்கத்தினால் போதுமான அளவு மக்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். -(3)