செய்திகள்

மே முதல் வாரம் பாராளுமன்றம் கலைப்பு: ஜூன் இறுதியில் பொதுத் தேர்தல்!

பாராளுமன்றத்தை மே மாத முதல் வாரத்தில் கலைத்து, பொதுத் தேர்தலை ஜூன் மாதம் இறுதி வாரத்தில் நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் இன்று பகல் நடைபெற்ற தேசிய நிறைவேற்றுச் சபையின் கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்பட்டது.

விருப்பு வாக்கு முறையை நீக்கி, வாக்குகளை கணக்கிடும் முறையின்படி தொகுதிக்கு உரிய எம்பீயை கட்சி நியமிக்க்கூடிய புதிய விதி திருத்தங்களுடன் தேர்தல் நடப்பு விகிதாசார முறையின் கீழ் நடைபெறும் எனவும் இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய அரசியல் குழப்ப நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக ரணில் விக்கிரமசிங்க தலைமையில் தேசிய சமாதான பேரவையின் கூட்டம் இன்று நடத்தப்பட்டது. நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய நிறைவேற்றுப்பேரவை மீண்டும் கூடவுள்ளது.