செய்திகள்

மே 12 முதல் 18 வரை முள்ளிவாய்க்கால் படுகொலை வாரமாக அனுஷ்டிக்க சிவாஜிலிங்கம் வேண்டுகோள்

முள்ளிவாய்க்காலில் திட்டமிட்ட இனவழிப்பு நடைபெற்ற மே 12 முதல் 18 வரையான காலப்பகுதியை தமிழின படுகொலை வாரமாக தமிழ் மக்கள் அனுஷ்டிக்க வேண்டும் என வடமாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்பு விடுத்துள்ளார்.

புலம்பெயர் தமிழ்; மக்கள் மற்றும் தமிழக உறவுகள் இந்த வாரத்தை இன அழிப்பு வாரமாக வருடந்தோறும் அனுஷ்டித்து வரும் நிலையில் வடக்கு கிழக்கில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தமிழ் மக்கள் இவ்வாரத்தை உணர்வுபூர்வமாக நினைவுகூர வேண்டும்.

இதனைச் செய்வதன் மூலமே எம்மீதான இன அழிப்பை நாம் உலகுக்குச் சொல்வதுடன், அதற்காக தொடர்ந்து நீதி கோரிப் போராட முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த அழிவுகளிலிருந்து தமிழ் மக்கள் மீண்டெழ முடியாத நிலையிலேயே அந்த வலிகளுடன் தற்போது இருக்கின்றனர். இதனையே தமது உறுவுகளுக்காக மே 18ஆம் திகதியை துக்கநாளாகக் குறிப்பிட்டு அந்த நாளில் உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தி அனுஷ்டித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வருடம் மே 12 முதல் 18 வரையான ஒரு வாரகாலத்தை தமிழினப் படுகொலை வாரமாகப் பிரகடனப்படுத்தியிருக்கின்ற அதேவேளை அந்த வாரத்தில் வடக்கு கிழக்கு எங்கும் துக்காவரமாக அனுஷ்டிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.