செய்திகள்

மைக்ரோசொப்ட் நிறுவனத்துக்கெதிராக இந்தியாவில் வழக்கு

மைக்ரோசொப்ட் நிறுவனமானது இந்தியாவை சேர்ந்த Omnitech Support மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களுக்கு  எதிராக வழக்கு ஒன்றினை  தாக்கல் செய்துள்ளது.

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் இதுபற்றி தெரிவிக்கையில் மைக்ரோசொப்டின் இந்த நடவடிக்கையானது  இணையதள மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிரான தமது  முதல் கட்ட நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.  அவர் மேலும் தெரிவித்ததாவது: இவ்வாறான தொழில்நுட்ப உதவிகளை வழங்குகின்ற நிறுவனங்கள் தம்மை மைக்ரோசொப்ட் என போலியாக அறிமுகம் செய்து கொள்கின்றன. இதனால் ஏறக்குறைய 3.3 மில்லியன் அமெரிக்கர்கள் ஒவ்வொரு வருடமும் பாதிப்புக்கு உள்ளாகுகின்றார்கள். வழக்கு பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளவாறு; இவ்வாறான நிறுவனங்கள் இணைய தளங்களில் இருந்து தொலைபேசி இலக்கங்களை எடுத்து இத்தகைய மோசடிகளில் ஈடுபடுகின்றன.  மைக்ரோசொப்டின் ஆய்வின் படி அதிகளவிலான அமெரிக்கர்கள் இத்தகைய நிறுவனங்களில் இருந்து மோசடியான தொலைபேசி அழைப்புக்களை பெற்று வருகின்றார்கள். வாடிக்கையாளர்கள் இத்தைகைய மோசடிகளில் இருந்து விடுபட வேண்டுமென்றால் நேரடியாக எந்த நிறுவனத்தில் இருந்து அழைப்பு வந்ததாக கூறப்பட்டதோ அந்த நிறுவனத்துக்கு மீண்டும் தொலைபேசி செய்து உண்மையினை அறிந்து கொள்வதே சிறந்ததாக இருக்கும் என அமெரிக்க வர்த்தக சமஷ்டி ஆணையகம் அறிவுரை வழங்கியுள்ளது.