செய்திகள்

மைத்திரிக்கு இடையூறு செய்யவேண்டாம் என்று மகிந்தவுக்கு பசில் அறிவுரை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை புதிய ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க அனுமதிக்கும் படியும் எந்த இடையூறும் செய்ய வேண்டாம் எனவும் அவரது சகோதரரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஸ ஆலோசனை வழகியிருக்கிறார்.

இவ்வாறு தந்திரோபாயமாக நடந்துகொள்வதன் மூலமே ராஜபக்ஸ தன்னை ஒரு உண்மையான சுதந்திர கட்சியாளர் என்று கூறுவதற்கு இடமளிக்கும் என்றும் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு உதவும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.