செய்திகள்

மைத்திரிக்கு மோடியும் மகிந்தவும் தொலைபேசி மூலம் வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேனவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது பற்றி தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, அமைதியானதும் ஜனநாஜக ரீதியானதுமான இந்த தேர்தலுக்காக இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதாக அவர் குரிப்பிட்டுள்ளார்.

இதேவளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் மைத்திரிபால சிறிசேனவுக்கு தொலைபேசி மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதன்போது எப்போது ஜனாதிபதியாக பதவி ஏற்க உத்தேசித்திருப்பதாக வினவினார்.