செய்திகள்

மைத்திரிபால இன்று ஜனாதிபதியாகப் பதவியேற்பார்?

ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ படுதோல்வியடைந்ததையடுத்து பொது எதிரணியின் ஜனாதிபதி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று மாலையிலேயே இலங்கையின் ஏழாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாகப் பதவியேற்பார் என எதிரணி வட்டாரங்கள் தெரிவித்தன.

வெற்றி பெற்றால் நாளைய தினமே பதவிப் பிரமாணத்தைச் செய்வதற்கு மைத்திரிபால முன்னர் திட்டமிட்டிருந்த போதிலும், அந்தத் திட்டத்தை மாற்றிக்கொள்ளலாம் எனத் தெரியவந்திருக்கின்றது.

பிரதான எதிர்க்கட்சித் தலைவர்களின் முக்கிய கூட்டம் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெறவுள்ளது. புதிய ஜனாதிபதி பதவியேற்பு, அமைச்சரவையை அமைத்துக்கொள்வது என்பன தொடர்பில் அதில் ஆராயப்படும்.