செய்திகள்

மைத்திரியின் கூட்டத்துக்கு துப்பாக்கியுடன் சென்றவர் பிணையில் விடுதலை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட கூட்டத்திற்கு துப்பாக்கியை கொண்டுசென்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைதான இராணுவ கோப்ரலும், கடமைதவறியதாக கைதான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அங்குனகொலபெலஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் இன்று (01) ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தலா இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் இரண்டிலும், 25,000 ரூபா ரொக்கப் பிணையிலும் சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும், பொலிஸ் சார்ஜன் ஒருவருமே கடமை தவறிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.