செய்திகள்

மைத்திரியின் தெரிவை தேர்தல் ஆணையாளர் அறிவித்தார்

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபாலசிறிசேன இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
தேர்தல் ஆணையகத்தில் அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.தேர்தலில் போட்டியிட்டவர்களுக்கு குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிக்கு அவர் தனது நன்றியை வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் புதிய ஜனாதிபதி மக்கள் அவர் மீது வெளியிட்டுள்ள நம்பிக்கையை நிறைவேற்றுவார் எனவும் தேர்தல் ஆணையாளர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய மைத்திரிபால சிறிசேன சுதந்திரமான தேர்தலை நடத்துவதில் காட்டிய அர்ப்பணிப்பிற்காக மகிந்த ராஜபக்சவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.