செய்திகள்

மைத்திரியின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இந்தியாவுக்கு: பெப்ரவரியில் செல்கிறார்

மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதலாவதாக இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார்  என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செய்தித் தொடர்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மோடி எங்கள் ஜனாதிபதியை இந்தியாவுக்கு முதலில் வருகை தருமாறு அழைத்துள்ளார். இதனையடுத்து அடுத்த மாதம் ஜனாதிபதி இந்தியாவுக்கு விஜயம் செய்யவிருக்கிறார் என அவர் தெரிவித்துள்ளார். அதனையடுத்து அவர் பாகிஸ்தான் செல்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பெப்ரவரி மாதத்தின் இறுதிப்பகுதியில் இந்தியா செல்லும் மைத்திரிபால, அங்கிருந்து பாகிஸ்தான் செல்வார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.