செய்திகள்

மைத்திரியின் வெற்றியை தடுப்பதற்கான சதி முயற்சி குறித்து விசாரணை

ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதியும், முன்னாள் பாதுகாப்பு செயலாளரும் சதிப்புரட்சியொன்றிற்கு முயற்சிகளை மேற்கொண்டமை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதை தடுக்குமாறு இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது,எனினும் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டுள்ளனர்,நீதியான சுதந்திரமான தேர்தலொன்றை உறுதிசெய்யதமைக்காக நாடு அவர்களுக்கு நன்றிகடன் பட்டுள்ளது.
புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்பட்ட பின்னர் சதிப்புரட்சி முயற்சிகள் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகும், மக்களுக்கு உண்மைகள் தெரிவிக்கப்படும்.
மக்களின் ஆணைக்கு எதிராக ராஜபக்ச செயற்பட முயன்றார் என்பது மக்களுக்கு தெரியவேண்டும்.
வாக்களிப்பு தினத்தன்று நிலவரம் அமைதியாக காணப்பட்டாலும் திரைமறைவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மக்களுக்கு தெரியப்பபடுத்தவேண்டும்,தோல்வியை ஏற்றுக்கொள்ளதா ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் சிலர் வதந்திகளை பரப்பிவருகின்றனர்.
அரசாங்கம் சமூகங்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்த எந்த குழுவிற்கும் இடமளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.