செய்திகள்

மைத்திரியின் வேலைத் திட்டங்களுக்கு பாங்கி மூன் வாழ்த்து

இலங்கையின் புதிய ஆட்சியில் முன்னெடுக்கப்படும்  வேலைத் திட்டங்களுக்கு  ஐ.நா செயலாளர் நாயகம் பாங்கி மூன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை ஜனாதிபதியுடன் தொலைபேசினூடாக உரையாடும் போதே பாங்கிமூன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது 19வது அரசியலமைப்பு திருத்தத்தை நிறைவேற்றுவதற்காக மைத்திரிபால முன்னெடுத்த நடவடிக்கைகளுக்கு தனது கௌரவத்தை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்துள்ள பாங்கிமூன் அதேபோன்று 20வது திருத்தத்தை நிறைவேற்ற வேண்டுமெனவும் தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எதிர்வரும் செப்படம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மாநாட்டில் தான் கலந்துக்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.