செய்திகள்

மைத்திரியும் மகிந்தவும் தமக்கு வாக்களித்தவர்களை காட்டிக் கொடுத்துவிட்டனர்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் போட்டியிட மஹிந்த ராஜபக்ஷவுக்கு இடம் வழங்கியமை தமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என்றும் ஆனால் இதன்மூலம் மஹிந்த ராஜபக்ஸ தனக்கு வாக்களித்த 5.8 மில்லியன் மக்களையும் மைத்திபால சிறிசேன தனக்கு வாக்களித்த 6.2 மில்லியன் மக்களையும் கட்டிக்கொடுத்து விட்டதாக ஜே. வி. பி தெரிவித்திருக்கிறது.

மைத்திபால சிறிசேன வெறுமனே சுதந்திர கட்சியில் தனது அதிகாரத்தையும் பதவியையும் தக்க வைக்க விரும்பினார் என்றும் அதேநேரம் ராஜபக்ஸ தன மீதான குற்றச்சாட்டுக்களில் இருந்து தப்பிக்கொள்ள அதிகாரத்தை வேண்டியிருந்ததாகவும் ஜே. வி. பி யின் மதிய குழு உறுப்பினர் சீனில் ஹன்துன் நெத்தி தெரிவித்திருக்கிறார்.