செய்திகள்

மைத்திரியும் மஹிந்தவும் இரகசியமாக சந்தித்தனர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோருக்கிடையே நேற்று இரவு சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சந்திப்பு சபாநாயகரின் இல்லத்தில் நடைபெற்றுள்ளதாகவும் இதில் மைத்திரி மஹிந்தவை தவிர வேறு யாரும் கலந்துக்கொள்ளவில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று இரவு 9 மணியளவில் மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு எம்.பிக்களின் விருந்துபசார நிகழ்வொன்றில் கலந்துக்கொண்ட மஹிந்த ராஜபக்‌ஷ அதன்பின்னர் சபாநாயகரின் வீட்டுக்கு சென்று ஜனாதிபதி மைத்திரியுடன் சந்திப்பு நடத்தியுள்ளார்.

எவ்வாறாயினும் இருவருக்குமிடையிலான சந்திப்பில் என்ன கதைக்கப்பட்டதென்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.