செய்திகள்

மைத்திரியை அவசரமாகச் சந்திக்க ஈ.பி.டி.பி. முயற்சி: டக்ளஸுக்கு அமைச்சர் பதவி கிடைக்குமா?

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி.யின் உயர் மட்டக்குழு ஒன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை விரைவில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவிருப்பதாக கட்சி வட்டாரங்கள் ‘சமகளம்’ இணையத்தளத்துக்குத் தெரிவித்திருக்கின்றன.

ஈ.பி.டி.பி.யின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக இந்தச் சந்திப்பின்போது முக்கியமாக ஆராயப்படும் எனவும், டக்ளஸ் தேவானந்தாவுக்கு அமைச்சர் பதவி ஒன்றைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் முக்கியமாககக் கவனம் செலுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.ம.சு.மு.வின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீரவை ஈ.பி.டி.பி.யின் பிரதிநிதிகள் குழு ஏற்கனவே சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியிருந்தது. எதிர்காலத்தில் ஐ.ம.சுமு. அரசுக்கு ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் இதன் போது ஈ.பி.டி.பி. தரப்பினர் தெரிவித்திருந்தார்கள். இதன் தொடர்ச்சியாகவே ஜனாதிபதியை அவர்கள் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகின்றது.

ஈ.பிடி.பி.யின் முன்னணி உறுப்பினர்களில் ஒருவரான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார் ஈ.பி.டி.பி.யிலிருந்து வெளியேறியுள்ள நிலையில், கட்சியின் மாநாடு அடுத்த மாத முற்பகுதியில் நடைபெறவிருக்கும் பின்னணியிலேயே ஜனாதிபதியுடன் பேசுவதற்கு ஈ.பி.டி.பி. தலைமை முற்பட்டிருப்பதாக தெரியவந்கின்றது.
R-06