செய்திகள்

மைத்திரியை சந்திக்க இருக்கும் நேரத்தில் கைதுகள் இது திட்டமிட்ட செயலே : மஹிந்த

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடலை நடத்த திட்டமிட்டுள்ள நேரத்தில் கைதுகள் இடம்பெறுவதாகவும் இது திட்டமிட்ட செயலே எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று இரவு விடுக்கப்பட்ட அறிக்கையொன்றிலேயெ மேற்கண்டவாறு அவர் தெரிவித்துள்ளார்.

கைதாகி சிறையில் வைக்கப்பட்டுள்ள இராணுவ கொப்ரால் சேனக குமாரகே தனது பாதுகாப்பு பிரிவு உறுப்பினரhவார் அவர் தன்னுடைய கோரிக்கையின்படியே நாமல் ராஜபக்ஷவுடன்
தவறு செய்யாத இராணுவ கொப்ராலை ஜனாதிபதிக்கு எதிராக சூழ்ச்சி செய்ததாக கூறி நாமலின் பெயரையும் இணைத்து குற்றம்சாட்டியுள்ளர் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டமை தனது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பழிவாங்கலின் அங்கமேயாகும்.

இதற்கு முதல் எனக்கும் மைத்திரபால சிறிசேனவுக்கும் இடையே சந்திப்பொன்று நடக்கவிருந்த நேரத்தில் எனது சகோதரனான பஸில் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இதேபோன்று மீண்டும் அந்த சந்திப்புக்கான தினம் தீர்மானிக்கப்பட்டிருக்கையில் எனது பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர். அத்துடன் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் கைது செய்துளள்னர். இது திட்டமிட்ட செயற்பாடுகளே. என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.