செய்திகள்

மைத்திரியை ஜனாதிபதி ஆக்க மட்டுமன்றி என்னை பிரதமராக்கவுமே மக்கள் வாக்களித்தனர்: ரணில்

மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக ஆக்குவதற்கு மட்டுமன்றி தன்னை பிரதமராக்குவதற்குமே கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி மக்களின் ஆணையை பெற்றுக்கொண்டதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆட்சி ஏற்று குறுகிய காலத்துக்குள் பொதுமக்களுக்கு பல நிவாரண நடவடிக்கைகளை புதிய அரசு செய்திருப்பதாகவும் யுத்தத்தின் பின்னரான 5 வருட காலத்தில் பழைய அரசாங்கம் செய்யாத பல நிவாரண நடவடிக்கைகளை சில நாட்களுக்குள் புதிய அரசு செய்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.