செய்திகள்

மைத்திரியை மக்கள் தெரிவு செய்தனர்; ரணிலை பிரதமராக யார் தெரிவு செய்தது? விமல் கேள்வி

“ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை மக்கள் தெரிவு செய்­தனர். ஆனால் பிர­தமராக ரணில் விக்கிரம சிங்கவை மக்கள் தெரிவு செய்­ய­வில்லை. ஜனா­தி­பதியும் எதிர்க்­கட்­சியும் ஒரு கட்­சி­யாக இருக்­கையில் பிர­தமர் வேறு கட்­சியில் இருந்து ஆட்சி நடத்­து­கின்­றார். இது குழப்­ப­க­ர­மான தேசிய அரசு” என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மதநாட்டில் உரையாற்றிய போதே விமல் இதனைத் தெரிவித்தார். அவர் இங்கு மேலும் தெரிவித்ததாவது:

“இந்த அரசாங்கத்தில் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, ஹெல உறு­மய போன்ற கட்­சிகள் தீர்­மா­ன­மெ­டுக்­கின்­றனர். இது மக்­களின் தெரிவில் உருவான ஆட்சி அல்ல. ஜன­வரி 8 ஆம் திகதி மக்கள் வாக்குக் கொடுத்­தது 9 ஆம் திகதி இவ்­வா­றான குழப்­ப­கர ஆட்­சி­யினை உரு­வாக்க அல்ல. இப்­போது மக்கள் சிந்­திக்க ஆரம்­பித்து விட்­டனர்.

எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் தனித்து அனை­வரும் போட்­டி­யிட்டு பின்னர் முத­லிடம் வகிப்பர் பிர­தமர் இரண்டாவது வரு­பவர், உப பிர­தமர் என கூறி மக்­களை ஏமாற்­று­கின்­றனர். இவர்களின் செயற்பாட்டினால் நாட்டில் எதிர்க்­கட்சி ஒன்று இல்­லாது போய்­விட்­டது. தேசிய அரசு உரு­வாக தனித்து போட்­டி­யிட வேண்­டிய அவ­சியம் இல்லை. இதில் தெளி­வாக தெரி­கின்­றது.

சர்­வ­தே­சத்­திற்கும் புலம்­பெயர் புலி அமைப்­பு­க­ளுக்கு தேவை­யான அரசை உரு­வாக்க இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். இதனை தடுத்து நிறுத்த வேண்டும். மீண்டும் மக்கள் ஆட்­சிக்கு திரும்ப வேண்டும். எனவே, வெற்­றியின் பய­ணத்­தினை மீண்டும் நாம் ஆரம்­பித்து வெற்­றி­யினை பெறக் கூடிய பொருத்­த­மான தலை­மைத்­து­வத்­துடன் பொதுத் தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும்.

அதேபோல் எதிர்­வரும் 18 ஆம் திகதி இவ் முயற்­சி­யினை வெற்றி பெறச் செய்யும் வகையில் மக்­களை மீண்டும் ஒன்­று­ப­டுத்தி ஆட்­சி­யினை கைப்­பற்றும் மாநாட்­டினை நாம் மேற்­கொள்­ள­வுள்ளோம். இதில் ஐக்­கிய மக்கள் சுதந்­தி­ரகக் கூட்­ட­ணியில் அனை­வ­ருக்கும் அழைப்பு விடுக்­கின்றோம். எனவே, 18 ஆம் திகதி நுகே­கொ­டையில் அனைத்து மக்­க­ளையும் எதிர்­பார்க்­கின்றோம்.”