செய்திகள்

மைத்திரியை ஶ்ரீ.ல.சு.க தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் கம்பஹா மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டுமென  கட்சியின் கம்பஹா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக மேல் மாகாண முதலமைச்சர்  பிரசன்ன ரணதுங்கவின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
அண்மையில் கொழும்பில் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் நடைபெற்ற கம்ஹா மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் மாநாட்டிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ள்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இந்த மாநாட்டில் கம்பஹா மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளை சேர்ந்த 234 உறுப்பினர்களில் 178 பேர் கலந்துக்கொண்டிருந்ததாகவும். . இதன்போது அத்தனகல பிரதேச சபையை சேர்ந்த உறுப்பினர் ஒருவர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருக்கின்ற போதும் அவரால் கட்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல முடியாதெனவும் இதனால் அவரை அந்த பதவியிலிருந்து நீக்கி மஹிந்த ராஜபக்‌ஷவை தலைவராக நியமிக்க வேண்டுமெனவும் யோசனையை முன்வைத்துள்ளதாகவும்.
இதற்கு அங்கிருந்த சகலரும் கையை உயர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.