செய்திகள்

மைத்திரி உரையாற்றிய போது இனந்தெரியாத குழு அதிரடித் தாக்குதல்: 20 பேர் காயம் (படங்கள் இணைப்பு)

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன உரையாற்றிக்கொண்டிருந்த பொதுக் கூட்டம் ஒன்றின் மீது இன்று வெள்ளிக்கிழமை இரவு கடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மைத்திரிபால சிறினே உரையாற்றிக்கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.

இத்தாக்குதலின் போது மைத்திரிபாலவின் மெய்ப் பாதுகாவல்கள் துரிதமாகச் செயற்பட்டு அரை அங்கிருந்து பாதுகாப்பாக அப்புறப்படுத்தினகார்கள். கூட்டத்திலிருந்த எதிரணி ஆதரவாளர்களில் 20 க்கும் அதிகமானவர்கள் பலத்த காயமடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

1எதிரணியினரின் பிரச்சாரக்கூட்டங்களின் மீது தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தப்படும் நிலையிலேயே இன்றைய தாக்குதலும் இடம்பெற்றிருக்கின்றது. மைத்திரிபால சிறிசேன பெல்மதுளையில் கலந்துகொண்ட கூட்டத்தில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்ததாககக் கூறப்படுகின்றது.

இப்பகுதிக்கு திடீரென வந்த குழுவொன்று கற்களை சரமாரியாக வீசி தாக்குதலை நடத்தியது. அப்போது மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்த மைத்திரிபாலவை இலக்கு வைத்தும் கற்கள் வீசப்பட்டன. விரைந்து செயற்பட்ட மைத்திரிபாலவின் மெய்ப் பாதுகாவலர்கள் அவசரமாக அவரை அங்கிருந்து வெளியேற்றினார்கள்.

கூட்டத்தில் தான் உரையாற்ற ஆரம்பித்த போது மேடையையும் கூட்டத்தில் இருந்தவர்களையும் இலக்கு வைத்து சரமாரியான கல் வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவித்த மைத்திரிபால, ராஜபக்‌ஷவுக்கு ஆதரவான குண்டர்களே இந்தத் தாக்குதலை நடத்தயதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காரில் ஏற்றப்பட்டு அங்கிருந்து அவர் கொண்டு செல்லப்பட்டபோதும் தாக்குதல் இடம்பெற்றது. இதன்போது 20 க்கும் அதிகமான எதிரணி ஆதரவாளர்கள் படுகாயமடைந்திருக்கின்றார்கள். இவர்கள் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இந்தக் குழப்பத்தினால் அந்தப் பகுதியில் பெரும் பதற்ற நிலை காணப்பட்டது.

2