செய்திகள்

மைத்திரி எம்மை காட்டிக் கொடுத்துவிட்டாரோ? : அமைச்சருக்கு சந்தேகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தங்களை காட்டிக் கொடுத்து விட்டாரொ என்ற சந்தேகம் நிலவுவதாக தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் எம்.கே.டீ.குணவர்தன தெரிவிதுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் வேட்பு மனு கொடுக்க ஜனாதிபதி இணங்கியுள்ளமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த அணியை தோற்கடிக்க வேண்டுமென்று கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாட்டில் 62 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் எமது உயிரை பணயம் வைத்தே நாம் மைத்திரிக்கு ஆதரவாக வந்தோம். மீண்டும் மஹிந்தவுக்கு இடமளித்துள்ளமை மைத்திரி எம்மை காட்டிக்கொடுத்துவிட்டாரே என எண்ணத் தோன்றுகின்றது. அவர் அப்படி காட்டிக்கொடுக்க மாட்டார் என நம்புகின்றோம். எவ்வாறாயினும் நாம் ஜனாதிபதியின் ஆலாசனைகளை பின்பற்றி செயற்படுவோம். என தெரிவித்துள்ளார்.