செய்திகள்

மைத்திரி தலைமையில் நடந்த கூட்டத்தில் மஹிந்த ஆதரவாளர்கள் சந்திரிக்காவுக்கு எதிராக கூச்சல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று குருநாகலையில் நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மாவட்ட செயலணி கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டுள்ள கட்சி உறுப்பினர்கள் அவரை கெட்ட வார்த்தைகளால் திட்;டியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விமர்சிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக சந்திரிக்கா கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் அதற்கு எதிராகவே அந்த கூட்டத்;தில் கூச்சலிட்டு அவரை திட்டியுள்ளனர்.
கூட்டம் ஆரம்பித்த போது மங்கள விளக்கேற்றுவதற்காக சந்திரிக்காவின் பெயர் அழைக்கப்பட்ட நேரம் முதல் அவருக்கு எதிரான கூச்சல் ஆரம்பித்துள்ளது. பின்னர் கூட்டம் முடிந்து அவர் வெளியேரும் போது அவரை சூழ்ந்துக்கொண்ட கட்சி ஆதரவாளர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவே எமது உண்மையான தலைவர் அவரை தேவையில்லாது விமர்சிக்க வேண்டாம். ஓய்வு பெற்றால் கட்;சியை சீரழிக்காது வீட்டுக்கு சென்று ஓய்வெடுங்கள் என அவரை திட்டி தீர்த்துள்ளனர்.
இருப்பினும் அவ்விடத்தில் எதற்கும் பதிலளிக்காது அவர் அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேறிசென்றுள்ளார்.
இந்நிலையில் வடமேல் மாகாண முதலமைச்சர் தயசிறி ஜயசேகர அங்கு உரையாற்றும் போது மஹிந்தவின் உதவி கட்சியின் வெற்றிக்கு அவசியமாகுமென தெரிவித்தபோது பலத்த கரகோசத்தை எழுப்பி ஆதரவாளர்கள் அதற்கு தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.