செய்திகள்
மைத்திரி பிரதமராக வேண்டுமென எண்ணியவர்களில் நானும் ஒருவன் : பஸில்
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் மைத்திரிபால சிறிசேன பிரதமராக வேண்டுமென்றே தான் எண்ணிக்கொண்டிருந்ததாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வரும் அவர் தனியார் தொலைக்காட்சி செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் மைத்திரிபால சிறிசேன பிரதமராக வேண்டுமென்று நான் வேண்டிக்கொண்டிருந்தேன். எவ்வாறாயினும் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக நான் இன்னும் தீர்மானிக்கவில்லை. அப்படி போட்டியிட்டால் மஹிந்த ராஜபக்ஷவுடனேயே போட்டியிடுவேன் என தெரிவித்துள்ளார்.