செய்திகள்

மைத்திரி – மகிந்த சந்திப்பு நாளை மறுதினம்?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பு நாளை மறுதினம் புதன்கிழமை  நடைபெறவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

இருவருக்குமிடையிலான சந்திப்பு தொடர்பில் ஏற்கெனவே பல்வேறுபட்ட செய்தி வெளிவந்தபோதிலும், உத்தியோகபூர்வமாக எச்செய்தியும் வெளிவரவில்லை. இந்நிலையிலேயே எதிர்வரும் புதன்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.