செய்திகள்

மைத்திரி -மஹிந்தவை இணைத்து ஐ.ம.சு.கூவாக நாம் தேர்தலை எதிர்கொள்வோம் : சுசில்

மீண்டும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஆட்சியை அமைப்பதற்கும் , ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரை ஒன்றிணைத்து எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்வதற்கும் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் தீர்மானம் மேற்கொண்டுள்ளதாகவும் கூட்டணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்று ஶ்ரீ லஙடகா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் 100 நாள் முடிவடைநதுவிட்டது. இனியும் இந்த ஆட்சியை தொடர அனுமதிக்கமுடியாது. இதன்படி மீண்டும் ஆட்சியை பெற்றுக்கொள்ளவும் , கூட்டமைப்பின் 14 பங்களாளிக்கட்சிகளும் வழமைப்போல் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கடந்த வாரம் தீர்மானம் மேற்கொண்டுள்ளன. அத்துடன் இந்த விடயம் தொடர்பாக இன்று மாலை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளோம். அத்துடன் நாளை மஹிந்த ராஜபக்‌ஷவை சந்திக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இருவரையும் இணைத்து கூட்டமைப்பில் நாம் போட்டியிடுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.