செய்திகள்

மைத்திரி , மஹிந்த சந்திப்பு சபாநாயகர் இல்லத்தில் : இருவரும் இணங்கினர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையேயான சந்திப்பு சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே நடைபெறவுள்ளதாக தெரிய வருகின்றது.
இந்த சந்திப்பு எதிர்வரும் 6ம் திகதி நடத்த திட்டமிடப்பட்ட நிலையில் அதற்கு பொருத்தமான இடம் தொடர்பாக சிக்கல்கள் காணப்பட்ட நிலையில் தற்போது இதற்கு பொறுத்தமான இடமாக சபாநாயகரின் இல்லம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 25ம் திகதி இருவருக்கும் இடையிலான சந்திப்பை நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதும் அப்போது நிலவிய அரசியல் நிலைமைகளை கருத்திற் கொண்டு அதற்கு மஹிந்த இணங்கியிருக்கவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியினுள் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கிலேயே இந்த சந்திப்பு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.