செய்திகள்

மைத்திரி ரணிலை பாதுகாக்கிறார் : தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு

ஐக்கிய தேசிய கட்சியின் வாக்குகள் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆகுவதற்கு பெற்றுக்கொள்ளப்பட்டதன் காரணமாக மைத்திரிபால சிறிசேன ரணில் விக்கிரம சிங்கவை நம்பிக்கை இல்லா பிரேரணையில் இருந்து பாதுகாக்கிறார் என்று தேசிய சுதந்திர முன்னணி இன்று குற்றம் சாட்டியுள்ளது.

திங்கள் கிழமை நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் நம்பிக்கை இல்லா பிரேரணையை முன்கொண்டு செல்ல வேண்டாம் என்று பொதுஜன ஐக்கிய முன்னணியை ஜனாதிபதி கேட்டதாக தேசிய சுதந்திர முன்னணி இன்று பத்திர முல்லையில் நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளது.