செய்திகள்

மைத்திரி- ரணில் இடையிலான சகவாழ்வை ஆதரிக்கிறார என்று சுசில் பிரேமஜயந்த வெளிப்படுத்தவேண்டும்: வாசுதேவ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையிலான புரிந்துணர்வு அரசியலை ஆதரிக்கிறாரா என்பதை பகிரங்கமாக தெளிவுபடுத்த வேண்டும் என்று லங்கா சம சமாஜ கட்சி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார பொதுஜன ஐக்கிய முன்னணி செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவுக்கு சவால் இட்டிருக்கிறார்.

பொதுஜன ஐக்கிய முன்னணியின் நிறைவேற்றுக் குழுவில் இல்லாத கட்சிகள் கொள்கை ரீதியான அறிக்கைகளை வெளியிடுவதில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று சுசில் பிரேம ஜயந்த தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கையிலேயே நாணயக்கார இன்று இவ்வாறு தெரிவித்தார்.