செய்திகள்

‘மைனா’ நாயகன் விதார்த்துக்கு கலியாணம்

‘மைனா’ படத்தில் கதாநாயகனாக நடித்த விதார்த், வழக்கறிஞர் மகளை திருமணம் செய்ய உள்ளார். இவர்களது திருமணம் ஜூன் 11ஆம் தேதி திருப்பதியில் நடைபெறுகிறது.

மைனா, ஜன்னல் ஓரம், வீரம், காடு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் விதார்த். இவருக்கும் பழனியை சேர்ந்த வழக்கறிஞர் சிவானந்தம் என்பரின் மகள் காயத்திரி தேவிக்கும் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். நேற்று முன்தினம் பழனியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

ஜூன் 11ம் தேதி திருப்பதியில் திருமணம் நடைபெறவிருக்கிறது. தொடர்ந்து ஜூன் 17ல் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சியும் நடத்த முடிவுசெய்துள்ளனர். பெற்றோரின் ஏற்பாட்டிலேயே திருமணம் நடைபெறுகிறது.

2001ம் ஆண்டிலேயே சினிமாவில் அடியெடுத்துவைத்தவர் விதார்த். மின்னலே படத்தில் துணைநடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து சண்டக்கோழி, கொக்கி, லீ, திருவண்ணாமலை, குருவி உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.