செய்திகள்

மொர்ஷிக்கு 20 வருட சிறை

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் மொர்ஷிக்கு அந்நாட்டு நீதிமன்றமொன்று 20 வருட சிறைத்தண்டனை வழங்கி இன்று தீர்ப்பளித்துள்ளது.
அவர் பதவியிலிருந்த போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரை கொலைசெய்தாகக் கூறியே இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
மொர்ஷியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதன் பின்னர் அவர் முகங்கொடுத்துள்ள பல வழக்குகளில் ஒரு வழக்கின் தீர்ப்பே இதுவாகும். கடந்த 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அவரின் ஆட்சி இராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரது கட்சியான ‘முஸ்லிம் பிரதர்வுட்’ தடைசெய்யப்பட்டதுடன் , அதன் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் கைதுசெய்யப்பட்டனர்.